சென்னை, நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான குடும்ப பிரச்சனை விவகாரத்தில் பாடகி கெனிஷா பிரான்சிஸின் பெயர் தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்த அவர் தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். ரவி மோகன் விவகாரத்தில் பேசப்பட்ட கெனிஷா 2024-ம் ஆண்டு ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தி ரவியுடனான திருமண உறவை முறித்துக்கொள்ளக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதும், இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் கெனிஷா மீது பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. சமூக வலைதளங்களில் இருந்து விலகிய கெனிஷா தன்னை குறிவைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் மற்றும் எதிர்மறை கருத்துகள் பரவி வந்ததால் மனவேதனை அடைந்த கெனிஷா பிரான்சிஸ், கடந்த மே மாதம் சமூக வலைதளங்களில் இருந்து முழுமையாக விலகுவதாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். சோசியல் மீடியாவில் ரீ-என்ட்ரி இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா பிரான்சிஸ் மீண்டும் இன்ஸ்டாகிராமில் கம்பேக் கொடுத்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்து, சமூக வலைதளங்களுக்கு திரும்பியிருப்பதை அறிவித்துள்ளார். அந்த பதிவில், சிறிது காலம் ஆகிவிட்டது. அந்தத் தருணத்தில் நமக்குப் புரியாவிட்டாலும், நாம் இருக்க வேண்டிய இடத்திற்குச் சரியாக நம்மைக் கொண்டு சேர்க்கும் ஒரு அழகான வழியை வாழ்க்கை கொண்டுள்ளது. எனக்கு எழுதிய, என் நலனை விசாரித்த, எனக்காகப் பிரார்த்தனை செய்த, மற்றும் இந்த உலகில் கருணை இன்னும் இருக்கிறது என்பதை எனக்கு நினைவூட்டிய அனைவருக்கும் நன்றி. உங்கள் வார்த்தைகள் என்னைத் தேடி வந்தன. உங்கள் அன்பு என்னுடன் இருந்தது. மேலும், இந்தச் சிறிய சமூகம் சமூக ஊடகங்களை விட மேலானது - இது ஒரு குடும்பம் போன்ற உணர்வைத் தருகிறது என்பதை நீங்கள் எனக்கு நினைவூட்டினீர்கள். நான் அமைதியான இதயத்துடனும், ஆழமான நோக்கத்துடனும், எனக்கு எப்போதுமே மிகவும் முக்கியமான விஷயங்களால் இந்த இடத்தை நிரப்பி வைப்பேன் என்ற வாக்குறுதியுடனும் திரும்பி வருகிறேன். நாளை, நாம் மீண்டும் தொடங்குவோம். என்று தெரிவித்துள்ளார். கெனிஷாவின் இந்த ரீ-என்ட்ரிக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பலரும் வாழ்த்துகள் மற்றும் ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/a-fresh-start-after-the-controversies-kenisha-makes-a-social-media-comeback




