புதுடெல்லி: 2022 முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னர் 111 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 26 மக்களவை எம்.பி.க்கள், 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 78 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். தனிப்பட்ட முறையில் கட்சி மாறியது, கட்சி இணைப்பு, பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் புதிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது உள்ளிட்ட நிகழ்வுகள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. நாகாலாந்தில் அதிகம் மாநிலங்களை பொறுத்தவரை நாகாலாந்தில் அதிகபட்சமாக 32 பேர் கட்சி மாறியுள்ளனர். இவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ.க்கள் ஆவர். ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிக்கும், நாகா மக்கள் முன்னணிக்கும் இடையிலான அரசியல் மாற்றங்களுடன் பெரும்பாலான கட்சி மாற்றங்கள் தொடர்புடையதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் கட்சி மாறியுள்ளனர். அதே நேரத்தில் 32 எம்.எல்.ஏ.க்கள் நாகா மக்கள் முன்னணியில் இணைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் 20 பேர் மேற்கு வங்காளத்தில் 20 பேர் கட்சி மாறியுள்ளனர். இவர்கள் அனைவரும் மக்களவை உறுப்பினர்கள். அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்ததாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எம்.பி.க்கள், தங்கள் கட்சி தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான விவகாரம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் பரிசீலனையில் உள்ளது. தெலுங்கானாவில் 9 பேர் தெலுங்கானாவில் 9 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியுள்ளனர். இவர்கள் அனைவரும் பாரத ராஷ்டிர சமிதி சார்பில் வெற்றி பெற்றவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.கோவாவில் 8 பேரும், பஞ்சாப்பில் 8 பேரும் கட்சி மாறியுள்ளனர். கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். பஞ்சாப்பில் கட்சி மாறியவர்களில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் 2 எம்.எல்.ஏ.க்களும் அடங்குவர். மகாராஷ்டிராவில் 6 மக்களவை உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளனர். எந்த கட்சியில் இருந்து அதிகம் பேர் மாறினர்? கட்சி வாரியாக பார்க்கும்போது, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியில் இருந்து 25 பேர் கட்சி மாறியுள்ளனர். அடுத்து திரிணாமுல் காங்கிரசில் இருந்து 20 பேரும், காங்கிரசில் இருந்து 19 பேரும் கட்சி மாறியுள்ளனர்.பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து 9 பேரும், ஆம் ஆத்மி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து தலா 7 பேரும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியில் இருந்து 6 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 5 பேரும் கட்சி மாறியுள்ளனர். கட்சி மாறியவர்கள் சென்ற கட்சிகள் கட்சி மாறிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் அதிகபட்சமாக 32 பேர் நாகா மக்கள் முன்னணியில் இணைந்துள்ளனர். பா.ஜ.க.வில் 29 பேரும், தேசியவாத குடிமக்கள் கட்சியில் 20 பேரும் இணைந்துள்ளனர்.காங்கிரசில் 9 பேரும், சிவசேனையில் 8 பேரும், தேசிய மக்கள் கட்சியில் 6 பேரும், மக்கள் கட்சி அருணாசலத்தில் 4 பேரும் இணைந்துள்ளனர். கட்சி மாறிய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/111-mps-and-mlas-switched-parties-after-winning-elections-highest-number-in-nagaland




