சென்னை, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் மேம்படுத்தப்பட்ட'நம்ம சென்னை' செயலியில் தன்னார்வலர்கள் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- நம்ம சென்னை தமிழ்நாடு முதல்-அமைச்சர் 08.09.2026 அன்று தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்கள். வடகிழக்குப் பருவமழை உள்ளிட்ட அவசர காலங்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் (NGOs), சங்கங்கள், பிற அமைப்புகள் தன்னார்வலர்களாக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தங்களது பங்களிப்பினை வழங்கிடும் வகையில் செயலியில் பதிவு செய்திடும் நடவடிக்கைகளை தொடங்கிட உத்தரவிட்டார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மேம்படுத்தப்பட்ட 'நம்ம சென்னை' கைபேசி செயலி (Namma Chennai Mobile App - மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் ( வாயிலாக தன்னார்வலர்களாகப் பதிவு செய்திடும் நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் தன்னார்வலர்களின் சேவையைச் சீராக ஒருங்கிணைக்கவும், அவர்களின் விருப்பத்திற்கேற்ப பங்கேற்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யும் வழிமுறைகள்: 1. பயனர் பதிவு (User Registration): · கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) மூலம் 'நம்ம சென்னை' செயலியைப் பதிவிறக்கம் செய்யவும். · செயலியைத் திறந்து, பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் உள்நுழையவும் (Login/Register). · புதிய பயனர்கள் தங்கள் பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, முகவரி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் (Pincode) ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து கணக்கை உருவாக்க வேண்டும். 2. தன்னார்வலர் பதிவு படிவம் நிரப்புதல்: · செயலி அல்லது இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் 'Volunteer Registration' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். · வகை தேர்வு: தனிநபர் (Individual), கார்ப்பரேட் (Corporate) அல்லது தொண்டு நிறுவனம் (NGO/Associations) ஆகிய வகைகளில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். · விவரங்கள்: முந்தைய பேரிடர் அனுபவம், அடையாளச் சான்று (ID Proof) மற்றும் அவசரகால தொடர்பு விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். · திறமை மற்றும் மண்டலம் தேர்வு: தங்களின் சிறப்புத் திறமை (Area of Expertise) மற்றும் பணியாற்ற விரும்பும் பகுதி அல்லது மண்டலத்தைத் (Preferred Zone) தேர்ந்தெடுக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எந்தப் பகுதியிலும் பணியாற்ற விரும்பினால் 'Any Area in Chennai' என்ற விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். · அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, OTP சரிபார்ப்பை முடித்து படிவத்தைச் சமர்ப்பிக்கலாம் (Submit). வடகிழக்குப் பருவமழை உள்ளிட்ட அவசர காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் அரசு மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மக்களுக்குச் சேவை செய்ய விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் உடனே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செயலி பதிவிறக்கம் செய்ய: · Android: · iOS: மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-registration-begins-for-volunteers-to-work-alongside-the-corporation




