சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. த.வெ.க. ஆட்சி தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தல் களத்தை விஜய் தலைமையிலான த.வெ.க. முதல் முறையாக சந்தித்தது. 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற்று த.வெ.க. ஆட்சியை அமைத்தது. முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார். தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி முதல்-அமைச்சர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் களம் கண்டிருந்தார். இதில் 2 தொகுதிகளிலும் முத்திரை பதித்து வெற்றி மகுடம் சூடினார். இதைத்தொடர்ந்து அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 7 தொகுதிகள் காலி இந்த முடிவுக்கு உடன்படாமல் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்), ஜெயக்குமார் (ஈரோடு மாவட்டம் பெருந்துறை), சத்யபாமா (திருப்பூர் மாவட்டம் தாராபுரம்), இசக்கி சுப்பையா (நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தங்களை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் தேர்தல் நடத்த தடை இதற்கிடையில், திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். தற்போது ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 5 தொகுதிகளைத் தவிர்த்து, மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் 9-ந்தேதி (நாளை) தொடங்குகிறது. வாக்குப்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. எனவே, இந்த 2 தொகுதிகளுக்கும் அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது. அரசு சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது. பொதுவாக தேர்தல் காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால், அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அந்த நடைமுறை 2 தொகுதிகளிலும் அமல்படுத்தப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்படும். இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவ வீரர்கள் வருகை தர உள்ளனர். டெல்லியில் இருந்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் வருகை தருவார்கள். விருப்ப மனுக்கள் இந்த 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளன. தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் அந்தந்த கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். நா.த.க. வேட்பாளர்கள் இந்நிலையில் 2 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி வரும் 13-ஆம் தேதி அறிவிக்க உள்ளது. தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் நா.த.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன்படி இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/ntk-to-contest-by-election-who-are-the-candidates-buzz-worthy-details




