அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கொசுக்களால் பரவும் 'வெஸ்ட் நைல் வைரஸ்' (West Nile Virus) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு எதிராக அறிவியலாளர்கள் புதுமையானதொரு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர். பறக்கும் கொசுக்களை ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மற்றும் லைடார் (LiDAR) தொழில்நுட்பம் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்து, லேசர் கதிர் வீச்சு மூலம் அவற்றைச் செயலிழக்கச் செய்யும் புதிய கருவி தற்போது ஆரம்பகட்ட சோதனையில் உள்ளது. வழக்கமாக கொசுக்களைக் கட்டுப்படுத்த ரசாயன ஸ்பிரேக்கள், கொசுப் பொறிகள் மற்றும் லார்வா நாசினிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் மாற்றாக, குறிப்பிட்ட எல்லையில் பறக்கும் கொசுக்களை மட்டும் குறிபார்த்துத் தாக்கும் 'போட்டான் மேட்ரிக்ஸ்' (Photon Matrix) போன்ற AI கருவிகள் அறிமுகமாகியுள்ளன. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை வல்லுநர்கள் கொசுக்களுக்கான 'அயர்ன் டோம்' (Iron Dome) என்றே கருதுகின்றனர். கொசு எப்படி வேலை செய்கிறது இந்தத் தொழில்நுட்பம்? இந்தத் துல்லியத் தாக்குதலின் பின்னணியில் மிரட்டலான தொழில்நுட்பச் செயல்பாடுகள் உள்ளன. கருவியில் பொருத்தப்பட்டுள்ள லைடார் சென்சார், தனது கண்காணிப்பு எல்லைக்குள் பறக்கும் சிறிய பொருள்களின் இயக்கத்தை இடைவிடாமல் கண்காணிக்கும். பறப்பது கொசுதானா என்பதை அதிவேக கேமரா மற்றும் AI சிஸ்டம் நொடிப் பொழுதில் ஸ்கேன் செய்து உறுதி செய்யும். கொசு என உறுதி செய்யப்பட்டதும், அதன் இயக்கப் பாதையைக் கணித்து லேசர் கதிரைத் துல்லியமாகத் திருப்பும். லேசர் பட்டு கொசுவின் சிறகுப் பகுதி சேதமடைந்ததும், அது தொடர்ந்து பறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு வீழ்த்தப்படும். மனிதர்களோ அல்லது செல்லப்பிராணிகளோ லேசர் செல்லும் பாதையில் தற்செயலாக வந்தால், தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த 'mmWave radar' உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் உறுதியளிக்கின்றனர். இது கொசு ஒழிப்புக்கு முழுமையான தீர்வா? தொழில்நுட்பம் சிலிர்க்க வைத்தாலும், இது தற்போதைய நிலையில் சில நடைமுறைச் சவால்களைச் சந்திக்கிறது. இந்தக் கருவியால் சுமார் 20 அடி அல்லது 6 மீட்டர் சுற்றளவிலான சிறிய பகுதியை மட்டுமே கண்காணிக்க முடியும். மேலும், இதன் தற்போதைய விலை சுமார் 1,000 டாலரை ஒட்டியுள்ளது. இதனால் சாதாரண பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இது இன்னும் மலிவான தீர்வாக மாறவில்லை. AI Bubble உயர் சக்தி கொண்ட லேசர் பயன்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள், வெளிச்சப் பிரதிபலிப்புகள் மற்றும் திறந்தவெளியில் இதன் செயல்திறன் குறித்து இன்னும் சில கேள்விகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, இந்தத் தொழில்நுட்பம் இப்போதைக்கு முழு நகரத்தையும் கொசுக்களிடம் இருந்து காப்பாற்றும் பிரமாண்டத் தீர்வாக அல்லாமல், குறிப்பிட்ட ஒரு சிறிய இடத்தைப் பாதுகாக்க உதவும் சாத்தியமான முன்னோட்டமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ரசாயன நெடிகொண்ட ஸ்பிரேக்களுக்கு விடைகொடுத்துவிட்டு, AI மற்றும் லேசர் தொழில்நுட்பங்கள் கைகோக்கும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் எந்தளவுக்குச் செலவு குறைந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் உருவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/technology/ai-surveillance-laser-attack-high-tech-iron-dome-to-zap-mosquitoes




