சென்னை, பகுதிநேர ஆசிரியர்கள் 11,773 பேருக்கு பணி நிரந்தர அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பகுதிநேர ஆசிரியர்கள் ஆகஸ்டு 5-ந்தேதி சமர்ப்பிக்க உள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதலாவது பட்ஜெட் அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் அறிவிப்பையும் சேர்த்து அறிவிக்க முதல்-அமைச்சர் விஜய் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என தமிழக அரசுப் பள்ளிகளில் 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். உடற்கல்வி(3,843), ஓவியம்(3,721), கணினிஅறிவியல் (2,033), தையல்(1,584), இசை(329), தோட்டக்கலை(22), கட்டடக்கலை(49), வாழ்க்கைக்கல்வி(192) ஆகிய எட்டு பாடங்களில் தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிமாக பணிபுரிந்து வருகின்றார்கள். பட்ஜெட் தற்போது சம்பளம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்க அதற்கான ஊதிய நிலை 10-ன்படி ரூ.20,600 அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி ஆகியவற்றுடன் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை சுமார் ரூ.300 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். த.வெ.க. தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டு தற்காலிகமாக பணிபுரிந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பகுதிநேர ஆசிரியர்களை பொறுத்தவரை 15 கல்வி ஆண்டுகளை கடந்து தற்காலிகமாக பணிபுரிந்து வருவதால் முன்னுரிமை முக்கியத்துவம் கொடுத்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பட்ஜெட்டுக்கான அரசின் அறிவிப்பில் பணி நிரந்தரம் அறிவிப்பை முதல்-அமைச்சர் விஜய் அறிவிக்க வேண்டும் என 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/part-time-teachers-permanent-employment-announcement-in-the-budget-part-time-teachers-request-to-the-tamil-nadu-government




