சென்னை, தங்கம் விலை கடந்த 27-ந்தேதி வரை குறைந்து வந்து, அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 215-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை சென்னையில் வெள்ளி விலை 2-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-risen-slightly-what-is-the-situation-today-3




