இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் மோர்டிமர் என்பவர், தனது செல்லக் கிளியான ‘பார்னி’யை Grey parrot 9 ஆண்டுகளுக்கு முன்பு பறிகொடுத்தார். 2017-ம் ஆண்டு அவரது வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, வீட்டில் இருந்த பொருள்களுடன் பார்னியும் திருடுபோனது. பல ஆண்டுகளாக பார்னியைத் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. காலம் செல்லச் செல்ல, இனி தனது செல்லக் கிளியை மீண்டும் பார்க்க முடியாது என்ற எண்ணத்துக்கு ராபர்ட் வந்துவிட்டார். ஆனால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு எதிர்பாராத ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. பிராட்ஃபோர்டிலிருந்து (Bradford) சுமார் 20 மைல் தொலைவில் உள்ள IKEA பார்க்கிங் பகுதியில் ஒரு கிளி தனியாக சுற்றித் திரிவதை ஒருவர் கவனித்தார். தகவல் கிடைத்ததும், விலங்குகள் மீட்புக் குழுவினர் அந்தக் கிளியை மீட்டு பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் அந்தக் கிளியிடம் இருந்த மைக்ரோசிப்பை (Microchip) பரிசோதித்தபோது, அதன் பெயர் ‘பார்னி’ என்பது தெரியவந்தது. ஆனால், அதில் பதிவு செய்யப்பட்டிருந்த தொலைபேசி எண் பழையதாக இருந்ததால், உடனடியாக அதன் உரிமையாளரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து மீட்புக் குழுவைச் சேர்ந்த ஜெம்மா டம்பில், கிடைத்த தகவல்களை வைத்து இணையத்தில் தேடத் தொடங்கினார். காவல்துறையின் உதவியுடன் இறுதியில் ராபர்ட்டை கண்டுபிடித்து, “உங்கள் கிளி கிடைத்துவிட்டது” என்ற செய்தியைத் தெரிவித்தனர். 9 ஆண்டுகளுக்குப் பிறகு பார்னி உயிருடன் இருப்பதை அறிந்த ராபர்ட்டுக்கு அது மிகப்பெரிய உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. பார்னியின் பெயரை அழைத்தபோது, அது திரும்பிப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. நீண்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது உரிமையாளருடன் மீண்டும் இணைந்த பார்னி, தற்போது தனது குடும்பத்திடமே திரும்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/trending/man-reunited-with-stolen-pet-parrot-after-9-years




