நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘கிங் அண்ட் குயின்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் சண்முக பாண்டியன் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து ‘மதுரை வீரன், படைத்தலைவன், கொம்புசீவி’ என்ற படங்களில் நடித்தார். புதிய படத்தின் படப்பிடிப்பு கேப்டன் விஜயகாந்த் அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தனது 10-வது மைல்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இப்படத்தில் கேப்டனின் இளைய மகனான சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்த மணி சேயோன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை எல்.கே. சுதீஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார் திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், அந்தப் படத்துக்கு ‘கிங் அண்ட் குயின்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/shanmuga-pandians-new-film-title-released




