சென்னை, தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளுக்காக, 'ஸ்டார் 3.0' மென் பொருள் அறிமுகமாகி உள்ளது. இதன்படி, புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக கட்டுமான நிறுவனங்களுக்கு, பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் எழுதிய கடிதம் பின்வருமாறு; புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனை பத்திரங்களை, ஆக., 17 முதல் ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும்; 'மேனுவல்' முறையில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இதன்படி வீடு, மனை வாங்குவோர், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம். இதற்காக அந்த அலுவலகங்களில், குறிப்பிட்ட சில வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். * பத்திரப்பதிவுக்காக, 'வெப் கேமரா' வாயிலாக புகைப்படம் எடுக்கும் இடத்தில், பின்னணி திரை தெளிவாக, எவ்வித படங்களும் இன்றி இருக்க வேண்டும் * பத்திரப்பதிவு செய்வோரை படம் பிடிப்பதற்கு ஏதுவாக, தரமான, 'வெப் கேமரா' இருக்க வேண்டும். * சொத்து விற்பவர், வாங்குபவர் விரல் ரேகை மற்றும் 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவு செய்ய, பதிவுத்துறை மென்பொருளுடன் ஒத்துப்போகக்கூடிய கருவியை அமைக்க வேண்டும். * கருவிழி பதிவுக்கான கருவிகள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். * பத்திரப்பதிவு நடக்கும் இடத்தில், 100 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இணையதள சேவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். * பதிவுத்துறை இணையதளத்தில், 'லாக் இன்' எனப்படும் நுழைவு வசதியை முன்கூட்டியே ஏற்படுத்தி இருக்க வேண்டும். * கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியோர், இதற்கான வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் பத்திரப்பதிவு வெற்றிகரமாக நடக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/online-document-registration-becomes-mandatory-from-the-17th




