போபால், மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் ராஜ்நகரில் நேற்று மத நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உஜ்ஜைனி நகரில் இருந்து சாமியார்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் நிகழ்ச்சிக்காக யானை ஒன்றையும் அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்த உடன் யானையை ராஜ்நகரில் உள்ள தெருக்களுக்கு பாகன் உமேஷ் அழைத்து சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு அப்போது நகரின் முக்கிய சாலையில் சென்றுகொண்டிருந்த யானைக்கு அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய் ஹல்கர் (வயது 49) சாப்பிட வெல்லம் கொடுத்துள்ளார். அப்போது, திடீரென ஆத்திரமடைந்த யானை விஜய் ஹல்கரை மிதித்து அவரை கடுமையாக தாக்கியது. யானை மிதித்து தாக்கியதில் படுகாயமடைந்த விஜய் ஹல்கரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட சிலையில் ஹல்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய யானை பாகன் உமேசை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/elephant-kills-autorickshaw-driver-while-being-fed-jaggery-in-indore-mahout-booked




