ஈரோடு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்துள்ளது. சிறுத்தை கடித்து ஆடுகள் பலி ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்துத்தில் ஆட்டுத் தொழுவம் ஒன்று அமைந்துள்ளது. அந்த தொழுவத்தில் ஆடுகள் வழக்கம் போல கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த (திங்கட்கிழமை) நள்ளிரவில் சிறுத்தை ஒன்று, மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. மேலும், அங்கு கட்டப்பட்டிருந்த 3 ஆடுகளைக் கடித்துக் கொன்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் விவசாயி தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பொதுமக்கள் சாலை மறியல் இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தை நடமாட்டம் மற்றும் கால்நடைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், சிறுத்தையை உடனடியாக பிடிக்க வலியுறுத்தியும் அந்தியூர் முக்கிய சாலையில் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுத்தையின் கால் தடயங்களை ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பின்னரே பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி - பொதுமக்கள் சாலை மறியல் — Thanthi TV (@ThanthiTV) September 23, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/three-goats-killed-by-leopard-near-erode-villagers-stage-road-blockade




