கொரட்டாலா சிவா இயக்கத்தில் 2024 செப்டம்பரில் வெளியான திரைப்படம் 'தேவரா: பார்ட் 1'. ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் வெளியான 'சுட்டமல்லே' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த ஜான்வி கபூர் காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டு, ஆபாசமான மற்றும் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஜான்வி கபூர் 'தேவரா' படத்தில் ஜான்வி கபூருக்கு ஜோடியாக நடித்த ஜூனியர் என்.டி.ஆர் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ``பெண்களை தாயாகவும் தெய்வமாகவும் மதிக்கும் நாட்டில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களை இழிவுபடுத்துவது அருவருப்பானது மற்றும் வெட்கக்கேடானது. இந்த 'சுட்டமல்லே' மார்பிங் வீடியோவை உருவாக்கியவர்கள் மற்றும் அதனைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் சும்மா விடப்போவதில்லை." எனக் கடுமையாக எச்சரித்துள்ளார். தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில், ``பெண்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கும் இந்த ஏஐ மார்பிங் கலாச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது. இது ஏதோ ஒரு தனிநபரின் பிரச்னை மட்டுமல்ல. தெலுங்குத் திரையுலகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்று இது வேறு ஒருவருக்கு நடந்துள்ளது, நாளை உங்களுக்கோ, எனக்கோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களுக்கோ நடக்கலாம். நமக்கு நேரடி பாதிப்பு வரவில்லை என்பதற்காக நாம் அமைதியாக இருக்கக் கூடாது. சிரஞ்சீவி இது போன்ற ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆபாச மற்றும் அவதூறு உள்ளடக்கங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ சிறப்புத் தனிக்குழு மற்றும் உதவி மையத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய வீடியோக்களை உருவாக்குபவர்கள் மட்டுமின்றி, அவற்றை வேண்டுமென்றே பரப்புபவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இணையக் குற்றப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து இந்த வீடியோக்களை இணையத்திலிருந்து நீக்கவும் சட்டப் பூர்வமாக எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரசிகர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் கூட இந்த வீடியோக்களைப் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம். சமூக வலைத்தளங்களிலும், இணையக் குற்றப் பிரிவிலும் உடனடியாகப் புகார் அளியுங்கள். மனித கண்ணியத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். Sigma: ``ஜேசன் சஞ்சய் அவருடைய அப்பாவைப் போலவே இருக்கிறார்" - நடிகர் சிரஞ்சீவி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள. உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/tollywood/dont-even-watch-that-video-says-actor-chiranjeevi


