வாழைப்பழம் வாழைப்பழம் எளிதில் கிடைக்கக்கூடியதும், பல்வேறு சத்துக்களைக் கொண்டதுமான பழங்களில் ஒன்றாகும். இதில் பொட்டாசியம், வைட்டமின் பி6, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதிலும், சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக இருப்பதிலும் வாழைப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதிலும், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. சிலர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் என்று கூறுகிறார்கள். மற்றொரு தரப்பினரோ வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது செரிமான கோளாறு, உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதில் எது உண்மை என்று பார்ப்போம். வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அன்றைய நாளை தொடங்குவதற்கு தேவையான ஆற்றலின் ஒரு பகுதியை அளிக்கும். மேலும் வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவக்கூடும். அத்துடன் வாழைப்பழத்தில் கலந்திருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கும், சீரான குடல் இயக்கத்திற்கும் உதவிடும். வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாதா? சாப்பிடும் உணவுப்பொருளுக்கு ஏற்ப நமது உடல் எதிர்வினையாற்றும். வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடும்போது சிலருக்கு வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை போன்ற பிரச்சினைகள் வரலாம். அவ்வாறு பிரச்சினை ஏற்பட்டால் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? வாழைப்பழம் சாப்பிடுவதால் மட்டும் உடல் எடை அதிகரிக்கும் என்று கூற முடியாது. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன. வாழைப்பழத்தை அதிக அளவில் சாப்பிடுவது அல்லது சாப்பிடும் உணவில் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேர்த்துக்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதே வேளையில் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டால் சிலருக்கு விரைவில் பசி உண்டாகலாம். நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட வேண்டுமென்றால் வாழைப்பழத்துடன் தயிர், நட்ஸ், புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/do-you-eat-a-banana-every-morning-you-should-know-this-first




