சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:- முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்படி அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் ஆண்டு விழாவில் பங்கேற்றேன். தமிழ் பணியுடன் அமெரிக்கா பயணத்தை முடித்து வந்து உள்ளேன். உலக தமிழர்களை இணைக்க கூடிய மாநாட்டு பணிகளை தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் பள்ளிகள், அரசு நிறுவனங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு என்பது மரபுதான். எனவே பள்ளியில் ஆய்வு செய்ததில் அமைச்சர் கீர்த்தனா விதிமீறவில்லை. அவர் வீடியோ எதுவும் எடுக்கவில்லை. அவரே தமிழ் வழியில் படித்து, ஆங்கில திறமை பெற்றவர். தன்னைப்போல சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவி என்பதால் அக்கா ஸ்தானத்தில் இருந்து மாணவியிடம் பேசியதை தவறாக எடுக்கக்கூடாது. சட்டம்-ஒழுங்கு தமிழகத்தில் 50 ஆண்டுகளாக செய்த சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். தெரு எல்லாம் போதைப்பொருள் நடமாட்டம். ஒரு நாள் எல்லாமே சரி செய்யப்படும். போதை கலாசாரத்தை அழித்து வருகிறோம். 3-ம் வகுப்பு வரை பாடப்புத்தகத்தை மாற்றி உள்ளோம். டெக்ஸ்ட்டை குறைத்து வண்ணப்படங்களை அதிகமாக்கி உள்ளோம். அடுத்தடுத்த வகுப்புகளுக்கான பாடப்புத்தகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஜனநாயகத்தின் வெளிப்பாடு கூட்டணியில் உள்ள கட்சிகளை நண்பர்களாக பார்க்க கூடிய கட்சி த.வெ.க. இது தான் ஜனநாயகம். கூட்டணி கட்சிகளுக்கு எந்தவித நெருக் கடியும் தரமாட்டோம். திருமாவளவனின் பேச்சு ஜனநாயகத்தின் வெளிப் பாடாக பார்க்கிறோம்.தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்ததன் மூலம் பல்லாயிரம் கோடி ஊழலை தடுத்ததை அணுகூலமாக பார்க்க கூடாது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-did-minister-rajmohan-say-regarding-thirumavalavans-speech




