நெல்லை, ரெயில் நிலையத்தில் சமூக வலைதள பதிவால் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குவாதம் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென திரண்டு நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகராறு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மானூர் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மாணவர், ஒருவருக்கு ஆதரவாக சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்தை பதிவிட்டார். இன்ஸ்டாகிராமில் கிண்டல் அந்த பதிவிற்கு, நெல்லை சந்திப்பு துவரை ஆபீஸ் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் கிண்டலடிக்கும் வகையில் பதில் பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த மேட்டு பிராஞ்சேரி மாணவர், தான் படிக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் மாலை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர்கள் அனைவரும் ஒரு குழுவாக சேர்ந்து, இன்ஸ்டாகிராமில் கிண்டல் செய்த துவரை ஆபீஸ் பகுதி மாணவரை தாக்குவதற்காக அங்கு திரண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 7 மாணவர்கள் கைது இதையடுத்து, மோதலில் ஈடுபட முயன்றதாக 7 மாணவர்கள் மற்றும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/clash-over-social-media-post-7-students-arrested-cases-registered-against-4




