செயின்ட் லூயிஸ், சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றிபெற்றுள்ளார். 2-வது சுற்று ஆட்டம் கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்று மோதி வருகின்றனர். இதன் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவை சந்தித்தார். முதல் வெற்றி வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 95-வது நகர்த்தலில் சிந்தாரோவை சாய்த் தார். முதல் சுற்றில் டிரா செய்த பிரக்ஞானந்தா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/sinquefield-cup-chess-praggnanandhaa-registers-first-victory-by-defeating-shintaro




