சென்னை, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தை பெற்றுள்ளது. ரெயில்வே துறையில் நவீன கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், ரெயில்களின் இயக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெற்கு ரெயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- 3-வது இடம் கடந்த நிதியாண்டில், பயணிகள் பிரிவில் அதிக வருவாய் ஈட்டிய நாட்டின் முதல் 10 ரெயில் நிலையங்களில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது. அதிக வருவாய் ஈட்டிய ரெயில் நிலையங்களின் பட்டியலில் சென்னை சென்டிரல் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அதிக வருவாய் டெல்லி ரெயில் நிலையம் ரூ.3,337 கோடி வருவாயுடன் முதலிடத்திலும், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா ரெயில் நிலையம் ரூ.1,692 கோடி வருவாயுடன் 2-வது இடத்திலும் உள்ளன. சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தை பெற்றுள்ளது. ரெயில்வேயில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை இது வெளிப்படுத்துகிறது. இவ்வாறு ஜாபர் அலி தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-central-shows-massive-revenue-3rd-place-in-the-country



