பிரபு தேவா, வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரைத்துறையில் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு. இவர் தற்போது பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, நடிகரும், டைரக்டரும், நடன கலைஞருமான பிரபுதேவா, வடிவேலுவுடன் இணைந்து ''காதலன்'', ''எங்கள் அண்ணா'', ''மனதை திருடிவிட்டாய்'', ''மிஸ்டர் ரோமியோ'' போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரபுதேவா இயக்கிய ''போக்கிரி'' மற்றும் ''வில்லு'' திரைப்படங்களில் வடிவேலு பணியாற்றியுள்ளார். தற்போது பிரபுதேவா - வடிவேலு இணைந்து ‘பேங் பேங்’ படத்தில் நடித்துள்ளனர். சாம் ஆண்டனி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரித்துள்ளது. சாம்பிக்கள் தொடர்பான திரில்லர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு இப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் எஸ்.ஜே. சூர்யா கடந்த ஜனவரியில் வெளியிட்டார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மே மாதம் நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. படத்தின் டீசர் வெளியீடு இந்நிலையில், ‘பேங் பேங்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கௌ பாய் வேடத்தில் பிரபு தேவா, வடிவேலு இணைந்து சாம்பிக்களுடன் சண்டையிடும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இப்படம் விரைவில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. New world. New rules. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/prabhu-deva-vadivelus-bang-bang-film-teaser-out




