ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் நேற்று முன்தினம் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 100 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று பலவகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள். இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் 117 கிலோ எடையும், 6 அடி நீளமும் கொண்ட புள்ளி களவாய் மீன் சிக்கியது. இந்த மீனை 5 மீனவர்கள் சேர்ந்து படகில் இருந்து இறக்கி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இந்த களவாய் மீனை வியாபாரி ஒருவர் ரூ.23 ஆயிரத்துக்கு வாங்கினார். இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, "இதுபோன்று அதிக எடையில் புள்ளி களவாய் மீன் கிடைப்பது அரிதாகும். கடந்த 4 ஆண்டுகளில் 100 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட புள்ளி களவாய் மீன் கிடைத்தது இதுவே முதல்முறை” என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/117-kg-epinephelus-caught-in-pamban-fishermens-net




