மொன்டானா அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து நடந்துள்ளது. அப்போது 4 சிறுவர்கள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு வாலிபர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 7 வயது சிறுமி அவர்களில் 90 வயதுடைய பாட்டி முதல் 7 வயது கொண்ட சிறுமி வரை அடக்கம். விருந்து நடக்க இருந்த வீடும் தீப்பிடித்து முற்றிலும் எரிந்துள்ளது. சம்பவம் பற்றி பக்கத்து வீட்டில் வசிக்கும் டேவிட் ஹில்லர் என்பவர் கூறும்போது, முதலில் ஏதோ பட்டாசு வெடிக்கிறது என நினைத்தேன். ஆனால், துப்பாக்கி சூடு நடந்தது பற்றி மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் எச்சரித்த பின்னரே விசயம் தெரிய வந்தது என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/usa-youth-kills-8-relatives-then-dies-by-suicide




