திண்டுக்கல், கோவை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, திருப்பூர் அணி அபார வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் 10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் கோவை - திருப்பூர் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸை வென்ற திருப்பூர்' அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. 29 பந்துகளில் 66 ரன்கள் இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அமித் சத்விக் அதிரடி தொடக்கம் கொடுத்தார். வெறும் 29 பந்துகளில் 66 ரன்கள் விளாசிய அவர், 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களை அடித்து அசத்தினார். தொடர்ந்து மற்ற வீரர்களும் தங்களது பங்களிப்பை வழங்கினர். முகமது அலி ஆட்டமிழக்காமல் 29 ரன்களும், எம். மதிவண்ணன் ஆட்டமிழக்காமல் 34 ரன்களும் எடுத்தனர். 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது இதன் மூலம் திருப்பூர் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கோவை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, திருப்பூர் அணி அபார வெற்றி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-tiruppur-secures-a-magnificent-victory-over-kovai-chases-down-the-target-in-18-overs-in-impressive-fashion




