அரியானா, நீராவி, டீசல், மின்சார ரெயில்கள் வரிசையில் இப்போது அதிநவீன ஹைட்ரஜன் ரெயில் இந்தியாவில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. இந்த ரெயில் எவ்வாறு இயங்குகிறது? என்பதை பார்க்கப்போகிறோம். ஹைட்ரஜன் ரெயில் ஆரம்ப கால ரெயில்கள் நீராவி என்ஜின் கொண்டே இயக்கப்பட்டன. பிறகு ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியில் நீராவி என்ஜின், டீசல் என்ஜினாக மாறியது. தற்போது, டீசல் என்ஜின்களும் மறையத் தொடங்கி, மின்சார என்ஜின்களாக மாறிவருகின்றன. இதற்கிடையே, அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ஹைட்ரஜன் ரெயில், இந்தியாவில் முதல் முறையாக, அரியானா மாநிலத்தில் ஜிந்த் நகர் மற்றும் சோனிபட் இடையே (89 கி.மீ.) நேற்று தனது முதல் பயணத்தை தொடங்கியது. சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்டது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் இயக்கத்தை பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முழுக்க. முழுக்க. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. 10 பெட்டிகள் கொண்ட இந்த ஹைட்ரஜன் ரெயிலில் 682 இருக்கைகள் இருக்கின்றன. என்றாலும், 2,600 பேர் வரை பயணிக்க முடியும். உலகின் நீளமான ஹைட்ரஜன் ரெயில் இதுதான். மணிக்கு 75 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 250 முதல் 350 கி.மீ. வரை இயங்கும். ஜெர்மனியில் ஓடிய முதல் ரெயில்! ரெயிலில் ஹைட்ரஜன் வாயு நிரப்புவதற்காக, அரியானாவில் உள்ள ஜிந்த் நகரில் இதற்கென பிரத்யேக பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் ஹைட்ரஜன் ரெயில் 2018-ம் ஆண்டு ஜெர்மனியில் ஓடத் தொடங்கியது. தொடர்ந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பசுமை ரெயில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஹைட்ரஜன் ரெயிலை இயக்கும் 5-வது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. ஹைட்ரஜன் ரெயில் எவ்வாறு இயங்குகிறது? இனி, ஹைட்ரஜன் ரெயில் எவ்வாறு இயங்குகிறது? என்பதை தொடர்ந்து பார்ப்போம். ரெயிலின் முதல் பெட்டியின் மேற்கூரையில் உள்ள சிலிண்டர்களில் ஹைட்ரஜன் வாயு உயரழுத்தத்தில் நிரப்பப்படுகிறது. ரெயில் இயங்கத் தொடங்கும்போது, சிலிண்டரில் உள்ள ஹைட்ரஜன் வாயு எரிபொருள் செல்லுக்கு அனுப்பப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது அங்கு, ஹைட்ரஜன் வாயு, காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து மின்சாரத்தையும், தண்ணீரையும் உருவாக்குகிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தின் ஒரு பகுதி பேட்டரில் சேமிக்கப்படுகிறது. எரிபொருள் செல் மற்றும் பேட்டரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், மின்மோட்டாரை இயக்குகிறது. இதுவே ரெயிலை முன்நோக்கி நகர்த்துகிறது. அதே நேரத்தில், தண்ணீர் கழிவு நிலையில் ஆவியாக மேல்நோக்கி வெளியேறுகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது என்பதால், வருங்காலங்களின் ஹைட்ரஜன் ரெயில் இயக்கத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/following-steam-diesel-and-electric-trains-comes-the-state-of-the-art-hydrogen-train-do-you-know-how-it-operates




