சென்னை, ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், 'இனி திரைப்படங்களில் நடிக்கும் எண்ணமே இல்லை என்றும் கேமரா முன் தோன்றுவதை விட, திரைக்குப் பின்னால் இருந்து மட்டுமே பங்களிக்க விரும்புகிறேன்’ என்று ஷாலினி தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘டேர் டெவில்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஷாலினி தயாரிப்பு - அனிருத் இசை அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்குமார், ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பரில் தொடங்கும் படப்பிடிப்பு ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. கேமியோ ரோலில் நடிக்கிறாரா ஷாலினி இந்த நிலையில், ‘டேர் டெவில்’ படத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஷாலினி தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 'இனி திரைப்படங்களில் நடிக்கும் எண்ணமே இல்லை என்றும் கேமரா முன் தோன்றுவதை விட, திரைக்குப் பின்னால் இருந்து மட்டுமே பங்களிக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/is-shalini-acting-in-ajiths-dare-devil



