அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் பண்டிட்ஸ் என்ற ஆயுத கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. பாதுகாப்புப்படையினர் - ஆயுதக்குழுவினர் மோதல் இந்நிலையில், அந்நாட்டின் சாபரா மாகாணத்தில் இருந்து கிபி மாகாணத்திற்கு வனப்பகுதி வழியாக ஆயுதக்குழுவினர் நேற்று முன் தினம் பண்டிட்ஸ் ஆயுதக்குழுவினர் 200க்கும் மேற்பட்டோர் பைக்குகளில் சென்றுள்ளனர். அப்போது, அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த பாதுகாப்புப்படையினர் மீது ஆயுதக்குழுவினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. 29 பேர் பலி இந்த மோதலில் பாதுகாப்புப்படையினர் 10 பேர், ஆயுதக்குழுவினர் 17 பேர், பொதுமக்கள் 2 பேர் என மொத்தம் 29 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய ஆயுதக்குழுவினர் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அதேவேளை, தாக்குதலை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற கூடுதல் படையினர் தப்பிச்சென்ற ஆயுதக்குழுவினரை தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/nigeria-security-forces-armed-group-clash-29-killed




