வாட்டி வதைத்த வெயிலின் உக்கிரம் படிப்படியாக தணிந்து கோடை காலமும் விடை பெற்று, பருவ மழை காலம் பல பகுதிகளில் தொடங்கி விட்டது. வெப்ப தாக்கத்தில் சிக்கி வியர்வையில் நனைந்தவர்களை குளிர்விக்க பல இடங்களில் மழைச்சாரல் பொழியத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் பருவமழை கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம் இந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் நீங்கள் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல விரும்பினால், அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பு நீங்கள் செல்லும் இடத்தின் வானிலை முன்னறிவிப்பை சரிபார்க்கவும். அதிலும் மலைவாழிடங்கள் போன்ற சவாலான நிலப்பரப்புகளுக்கு செல்லும்போது வானிலை எச்சரிக்கையை கவனத்தில் கொள்வது முக்கியமானது. ஏனெனில் அங்கு நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பயண தேதிகளுக்கு முன்னும், பின்னும் 3 முதல் 5 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பை கவனியுங்கள். அது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவிடும். ஆடைகள் பருவமழைக் காலத்தில் பயணம் செய்யும்போது, நனைந்தாலும் விரைவாக உலரக்கூடிய, எடை குறைந்த சிந்தட்டிக் ஆடைகளை தேர்ந்தெடுக்கவும். வழுக்கும் சாலைகள், தெருக்களில் வசதியாகவும், பாதுகாப்பாகவும் நடப்பதற்கு நீர்ப்புகா மற்றும் வழுக்காத (ஆன்டி ஸ்கிட்) காலணிகளை பயன்படுத்தவும். அத்தகைய காலணிகள் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும். பயணத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றவும் உதவும். தேவையான பொருட்கள் குடை, நீர்ப்புகா பேக் கவர்கள், மழை கோட், ஹேர் டிரையர் போன்ற பருவமழை காலத்திற்கு அவசியமான பொருட்களுக்கு பேக்கில் இடம் ஒதுக்குங்கள். மழைத்துளிகளில் இருந்து அலைபேசியை பாதுகாக்க நீர்ப்புகா உறைகளையும் (வாட்டர்புரூப் கேசஸ்) எடுத்து செல்ல மறக்காதீர்கள். அதுபோல் லேப்டாப். சார்ஜர் போன்ற மின்னணு சாதனங்களை பாதுகாக்க காற்று புகாத 'ஜிப்லாக்' பைகளையும் எடுத்துச் செல்லுங்கள். கனமழையின் போது முக்கிய ஆவணங்களையும், முக்கியமான பொருட்களையும் காற்று புகாத உலர்ந்த பையில் வைக்கவும். மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் அவசரத்தேவைக்காக பவர் பேங்க் வைத்திருப்பதும் முக்கியமானது. எதிர்பாராதவிதமாக கனமழையில் சிக்கிக்கொள்ளும்போது இந்த சிறிய ஏற்பாடுகள் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். மருந்துகள்-கொசு விரட்டிகள் கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்கு மழைக்காலம் உகந்ததாகும். எனவே கொசுக்கள் மற்றும் பூச்சித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு ஸ்பிரே, லோஷன் போன்ற கொசு விரட்டிகள் உங்கள் பையில் இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிறிய காயங்கள் ஏற்பட்டால் உடனடி சிகிச்சைக்கு சிறிய முதலுதவி பெட்டி யையும் கைவசம் வைத்திருங்கள். மழைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் சளி, காய்ச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கான அவசர மருந்துகளையும் எடுத்துச்செல்ல மறக்காதீர்கள். உணவுகள் பருவமழைக்காலத்தில் நீரினால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நீரை காய்ச்சி பருகுவதே சிறந்தது. கெட்டிலை உடன் எடுத்து செல்வதும் நல்லது. திறந்தவெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்ப்பதும் சிறந்தது. பிஸ்கெட்டுகள், நட்ஸ்கள் போன்றவற்றை ஸ்நாக்ஸாக உட்கொள்ளலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/how-to-plan-a-trip-during-the-monsoon-season




