சென்னை, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருந்த கிரிஷ் சோடங்கர் கோவா மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு புதிய மேலிட பொறுப்பாளராக காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் அகமது மீரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் அகமது மிர் ஜம்மு காஷ்மீரின் தூரு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அம்மாநில முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், தற்போது, குலாம் அகமது மீர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/ghulam-ahmed-mir-appointed-as-the-tamil-nadu-congress-partys-in-charge




