புதுடெல்லி, நாடு முழுவதும் உணவிற்கு பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருள்களில் ஒன்று வெங்காயம். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் விளைவாக வெங்காய உற்பத்தி தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் இதன் விலை சுமார் 59% வரை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இருந்து கந்தா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 400 டன் வெங்காயம் டெல்லி சென்றடைந்தது. பின்னர், அவற்றை இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் நாபெட் விற்பனை நிலையங்கள் மூலம் சில்லறை விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெங்காயத்தை மானிய விலையில் 35 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான பணியை நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். விரைவில் டெல்லி போன்று சென்னை, மதுரை, எர்ணாகுளம், கவுகாத்தி ஆகிய நான்கு மையங்களுக்கு சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் வெங்காயம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/central-government-selling-onions-at-a-low-price



