மும்பை, மராட்டிய மாநிலத்தில் 16 வயது சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் 16 வயது சிறுமியிடம் நிர்பய் பாக்ரே (வயது 24) என்பவர் பழகி வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர், சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். வாலிபர் போக்சோவில் கைது இந்த நிலையில் சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செல்போன் சிக்னல் மூலம் திக்ஹோரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்த அந்த சிறுமியை போலீசார் அதிரடியாக மீட்டனர். இதையடுத்து அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/youth-arrested-for-tying-up-and-sexually-assaulting-girl




