தவெகவில் இணையும் அதிமுகவினரை முதல்வர் விஜய் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில்தான் அதிமுகவினர் தவெகவில் இணைந்து வந்தனர். அப்படியிருக்க தவெகவில் இணைந்த அதிமுகவினரை சந்திக்க முதல்வர் விஜய் இன்று நேரம் கொடுத்திருக்கிறார். விஜயபாஸ்கர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பலரும் தவெகவில் இணைந்துவிட்டனர். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டும் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா போன்றோரும் தவெகவில் இணைந்திருக்கின்றனர். இவர்கள் போக அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர்கள் வரைக்கும் பலகட்ட நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இன்றும் வைகைச் செல்வன், கூடலூர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசீலன் உட்பட பலரும் தவெகவில் இணையவிருக்கின்றனர். TVK Vijay | விஜய் இதுவரையில் இப்படி மாற்றுக்கட்சியினர் இணையும் விழா எதிலும் முதல்வர் விஜய் கலந்து கொண்டதில்லை. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் ஆதவ் அர்ஜூனா தலைமையிலேயே இணைப்பு விழாக்கள் நடைபெறும். அப்படி தவெகவில் இணைந்த பலரும் முதல்வர் விஜய்யை சந்திக்க வேண்டுமென அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர். முதல்வரின் காதுக்கும் மாற்றுக்கட்சியிலிருந்து இணைந்தவர்களின் கோரிக்கை சென்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து இன்று அவர்களை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கொடுத்திருக்கிறார். இன்று மதியம் 2 மணிக்கு மேல் பனையூர் அலுவலகம் வரும் முதல்வர் விஜய், விஜயபாஸ்கர்கள் தொடங்கி தவெகவிலிருந்து அதிமுகவில் இணைந்த பலரையும் சந்திக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/cm-vijay-agrees-to-meeting-admk-cadres-flock-to-panaiyur-in-large-numbers-whats-behind-the-buzz




