நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நேரடியாகக் களம் இறங்குகின்றனர். நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் CJP, SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் எழும்பூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இசைக்கலைஞர் அறிவு போன்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நடிகர் பிரகாஷ் ராஜ் நேரடியாக டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டார். இயக்குநர் பா.ரஞ்சித், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளப் பக்கம் மூலமாக ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு சல்மான் கான், ஆலியா பட், கரீனா கபூர் கான், சோனாக்சி சின்ஹா, சாரா அலி கான், வருண் தவான், நோரா பதேஹி உள்ளிட்ட முன்னணி பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், நடிகை ஆண்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நம்பிக்கையை அளிக்கும் கல்வி முறை வேண்டும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய மாணவர்களுடன் நான் தோளோடு தோள் நிற்கிறேன். மாணவர்களே நமது எதிர்காலம்; அவர்களின் குரல்கள் மரியாதையுடன் கேட்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் தன்னம்பிக்கை, நியாயம் மற்றும் நம்பிக்கையை அளிக்கும் கல்வி முறை கிடைக்க வேண்டும். அத்தகைய எதிர்காலத்திற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/director-soundarya-rajinikanth-speaks-out-in-support-of-students-protest




