சென்னை, தமிழகத்திற்கு ரூ.5,109 கோடி கல்வி நிதியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை நசுக்கி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது. மத்திய அரசுக்கு கண்டனம் தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன். கல்வி நிதி தடுத்து நிறுத்தம் தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-26-ல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் RTE திட்டத்திற்கு ரூ.714 கோடியை மட்டும் பெயரளவுக்கு விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்துப் பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது. கடுமையான நெருக்கடி மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின்றன. மோடி அரசின் பிடிவாதம் மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, PM-SHRI மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா? இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல். ரூ.5,109 கோடி கல்வி நிதியை விடுவிக்க கோரிக்கை தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/central-government-is-deceiving-tamil-nadu-by-not-releasing-rs-5109-crore-education-fund-manickam-thakur-mp-condemns



