நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக அறிமுகமாகும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் ‘டை டக்கா’ பாடல் வெளியானது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் நடிகை அனிஷ்மா. கடந்த 2023-ல் வெளியான மலையாள திரைப்படமான 'பூவன்' மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் சமீபத்தில் வெளியான 'சிறை' மற்றும் 'யூத்' படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ‘மொத ராத்திரி’ தற்போது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். 'குட் பேட் அக்லி', 'டியூட்' ஆகிய படங்களை தொடர்ந்து, மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். புதிதாகத் திருமணமான ஜோடியின் வாழ்வில் நடைபெறும் காதல், நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவு சமீபத்தில் ‘மொத ராத்திரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. தற்போது பின்னணிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது இந்நிலையில், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் ‘டை டக்கா’ பாடல் வெளியானது.புகபாரதி எழுதிய இந்தப் பாடலை, பரத் ஷங்கர் பாடியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/modha-rathri-film-first-single-out




