கோவை, தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை- நாகர்கோவில் ரெயில் இன்று, நாளை மறுநாள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. தண்டவாள பராமரிப்பு சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப் பட்டு உள்ளதாவது:- கரூர் ரெயில் நிலையம்- மூர்த்திப்பாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக இன்று (செவ்வாய்கிழமை), நாளை மறுநாள் (வியா ழக்கிழமை) 2 நாட்கள் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. பாலக்காடு-திருச்சி ரெயில் கேரள மாநிலம் பாலக்காடு டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்குக் புறப்படும் பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16844) இன்று மற்றும் நாளைமறுநாள் கரூர் மாவட்டம் புகலூர் ரெயில் நிலையத்துடன் (கொடுமுடி, கரூர் நிலையங்களுக்கு இடையே உள்ளது) தனது பயணத்தை முடித்துக்கொள்ளும். பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, இந்த ரெயில் புகலூர் முதல் திருச்சி ரெயில்நிலையம் வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவை- நாகர்கோவில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:16322) இன்று மற்றும் நாளைமறுநாள் ஆகிய 2 நாட்களில் கோவை- திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர், பொள் ளாச்சி மற்றும் பழனி வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரெயில் கோவை வடக்கு. பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர், சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி. ஈங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகளூர், கரூர் பாளையம், எரியோடு ஆகிய ரெயில் நிலை யங்களில் நின்று செல்லாது. அதற்கு பதிலாக போத்தனூர், கிணத்துக்க டவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatorenagercoil-train-to-operate-via-an-alternate-route




