லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கவிருக்கிறார். முன்னதாக சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யும் அஜித்குமாரும் சந்தித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. AK - Vijay முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 10 ஆம் தேதி இரவு முதல்வர் விஜய் லண்டன் கிளம்பி சென்றார். கார் ரேஸில் கலந்துகொள்ள நடிகர் அஜித்தும் லண்டனில்தான் முகாமிட்டிருக்கிறார். அவரை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், இன்று நடக்கவிருக்கும் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. போட்டியை தொடங்கி வைக்க இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு சில்வர் ஸ்டோன் மைதானத்துக்கு வந்த முதல்வர் விஜய், அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் கொடுத்தார். தொடர்ந்து சர்க்கியூட்டுக்குள் சென்ற விஜய் ரேஸிங் உடையோடு தயாராக இருந்த அஜித் குமாரை சந்தித்து கட்டித் தழுவி நலம் விசாரித்தார். AK - Vijay இருவரும் ஒன்றாக இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைக்கவும் செய்தனர். 'தலைவரோட ரேஸிங் சூட்டை பிடிச்சு நான் போட்டோ எடுத்துக்கணும்' என்றும் முதல்வர் விஜய் கூறினார். இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருக்கும் இந்த ரேஸை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/cm-vijay-i-want-a-photo-in-the-leaders-racing-suit-ajith-gives-vijay-a-warm-hug




