புதுடெல்லி, தமிழ்நாடு, கேரளம் உள்பட 5 மாநில தேர்தல்களுக்காக பா.ஜ.க. ரூ.1,473 கோடியும், காங்கிரஸ் ரூ.207 கோடியும் நன்கொடை பெற்றதாக அறிவித்து உள்ளன. நன்கொடை தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதற்காக தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் வரவு செலவு விவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ள அந்த கட்சிகளின் கணக்குப்படி, பா.ஜ.க. தேசிய தலைமை மட்டுமே ரூ.1,472.8 கோடி நன்கொடை பெற்று இருக்கிறது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியோ, ரூ.207.17 கோடி மட்டுமே அதன் தேசிய தலைமை மற்றும் மாநில கட்சிகள் பெற்று உள்ளன. அந்தவகையில் காங்கிரசை விட பா.ஜ.க. 7 மடங்கு அதிகம் வசூலித்து இருக்கிறது. வெளியாகாத விவரம் பா.ஜ.க. பொறுத்தவரை அதன் தலைமை அலுவலகம் மூலம் பெறப்பட்ட தொகையே ரூ.1,472.8 கோடியாக உள்ள நிலையில், அதன் மாநில அலுவலகங்களில் பெறப்பட்ட தொகை விவரம் இன்னும் வெளியாகவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதன் மூலம் அந்த கட்சி கூடுதல் நன்கொடை பெற்றிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய கையிருப்பு 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ள நிலையில் கட்சிகளின் இறுதி இருப்பை பொறுத்தவரை, பா.ஜ.க.விடம் ரூ.7,627.2 கோடி கையிருப்பு உள்ளது. இது மார்ச் 15-ந்தேதி (ரூ.6,722.6 கோடி) இருப்பை விட ரூ.904.6 கோடி அதிகம் ஆகும். அதேநேரம் காங்கிரசிடம் ரூ.103.2 கோடி மட்டுமே உள்ளது. இது முந்தைய இருப்பை (ரூ.169.06) கோடியை விட ரூ.65.86 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/bjp-national-leadership-announces-receipt-of-1473-crore-in-donations-for-elections-in-five-states




