Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வலி நிவாரணிகள், பிசியோதெரபி எல்லாம் செய்து பார்த்தும் வலி குறைந்தபாடில்லை. கடைசியாக சந்தித்த மருத்துவர், எனக்கு ஆர்த்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் பரிந்துரைத்தார். அறுவை சிகிச்சை என்றதுமே பயந்துபோய், அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர், அதே சிகிச்சையைச் செய்துகொண்ட செய்தியைப் பார்த்தேன். இது விளையாட்டு வீரர்கள், ஸ்டன்ட்டில் ஈடுபடுவோருக்கான சிகிச்சைதானே. இந்த அறுவை சிகிச்சை எனக்கு வலியிலிருந்து நிவாரணம் தருமா. சாதாரண அறுவை சிகிச்சைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் வீரபாகு முத்துசாமி. எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் வீரபாகு முத்துசாமி ``நடிகர் ஜூனியர் என்டிஆருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அவருக்கு ஆர்த்தோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு கொண்டிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தியும் வந்தது. நீங்கள் நினைக்கிற மாதிரி இது விளையாட்டு வீரர்களும், ஸ்டன்ட் செய்யும் நடிகர்களும் மட்டுமே செய்து கொள்கிற சிகிச்சை அல்ல. சாமானியர்களுக்கும் செய்யப்படுவதுதான். விளையாட்டுகளின் போதும், நடிகர்களுக்கு ஸ்டன்ட் காட்சிகளின் போதும் ஏற்படும் திடீர் திருப்பங்கள், பலமான மோதல்கள் மற்றும் ஒரே அசைவை மீண்டும் மீண்டும் செய்வதால் அவர்களின் தசைநார்கள் (ligaments) மற்றும் குருத்தெலும்புகள் (cartilage) சேதமடைவதால், இவர்களில் பலரும் இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்வார்கள். ஆனால், படிகளில் ஏறும்போது திடீரென முழங்கால் லாக் ஆவது, தோள்பட்டை வலி காரணமாக அலமாரியில் கையை நீட்டிப் பொருள்களை எடுக்க முடியாமல் போகும் நிலை, அல்லது அடிக்கடி பிடிப்பு தளர்ந்து நிலைதடுமாறும் மூட்டுகள் போன்றவை விளையாட்டு வீரர்களுக்கும் நடிகர்களுக்கும் மட்டுமே ஏற்படுபவை அல்ல. தோள்பட்டைDoctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் எனப்படும் தோள்பட்டை வலி; மீள வழி என்ன? போதுமான அளவு ஓய்வு எடுத்தும், பிசியோதெரபி அல்லது மருந்துகள் எடுத்தும் மூட்டு வலி, தோள்பட்டை வலி குறையாத நிலையில், பரிசோதனையில் சரிசெய்யக்கூடிய கட்டமைப்புப் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், யாருக்கு வேண்டுமானாலும் இந்தச் சிகிச்சையைச் செய்யலாம். ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை என்பது, உடலைப் பெரியளவில் கிழிக்காமல் சிறிய துளைகள் வழியாகவே மூட்டுகளின் காயங்களைச் சரிசெய்யும் நவீன சிகிச்சை முறையாகும். இதில் 'ஆர்த்ரோஸ்கோப்' எனப்படும் சிறிய கேமராவைத் துளை வழியாக உள்ளே அனுப்பி, மூட்டின் உட்பகுதியைத் திரையில் தெளிவாகப் பார்த்துக்கொண்டே, பிரத்யேகக் கருவிகள் மூலம் பாதிக்கப்பட்ட திசுக்களைச் சீரமைக்கிறோம். முக்கியமாக, முழங்கால் மற்றும் தோள்பட்டை மூட்டுகளுக்குச் செய்யப்படும் இந்தச் சிகிச்சையை, இடுப்பு, கணுக்கால், முழங்கை மற்றும் மணிக்கட்டு போன்ற பிற மூட்டுகளுக்கும் பயன்படுத்த முடியும். சிறிய வெட்டுகள் மட்டுமே இருக்கும் என்பதால் திசு சேதம், வலி மற்றும் கிருமித்தொற்று அபாயம் குறைவதோடு, நோயாளிகள் விரைவாக குணமடைந்து அன்றாட வேலைகளுக்குத் திரும்ப முடியும். ஆனாலும், நோயாளியின் பாதிப்பைப் பொறுத்தே இதைத் தேர்வு செய்ய முடியுமே தவிர, எல்லாச் சூழல்களிலும் எல்லோருக்கும் இது வழக்கமாகச் செய்யப்படும் ஓப்பன் சர்ஜரிக்கு மாற்றாகாது. அடிப்படைப் பராமரிப்புக்குப் பிறகும் 4 முதல் 6 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் வலி அல்லது வீக்கம், அல்லது மூட்டு சிக்கிக்கொள்வது, நிலைதடுமாறுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் எலும்பு, மூட்டு சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும். பரிசோதனைகளுக்குப் பிறகு பிசியோதெரபி, ஊசிகள் என அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகளே முதலில் பரிந்துரைக்கப்படும். Doctor Vikatan: பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல்; பிசியோதெரபி மட்டும் போதுமா? பரிசோதனைகளுக்குப் பிறகு பிசியோதெரபி, ஊசிகள் என அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகளே முதலில் பரிந்துரைக்கப்படும். தானாகக் குணமடையாத தசைநார் கிழிசல்களுக்கு மட்டுமே ஆர்த்ரோஸ்கோபி செய்யப்படும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகள் (Physiotherapy & Rehabilitation) மூலம், மூட்டின் முழு பலத்தையும் இயல்புநிலையையும் மீட்டெடுக்கலாம். வலி தாங்க முடியாத அளவுக்கு மாறும் வரை காத்திருக்க வேண்டாம். ஆரம்பகட்டத்திலேயே மருத்துவரை அணுகினால், அறுவைசிகிச்சை இல்லாத எளிமையான முறையிலேயே பாதிப்பைச் சரிசெய்து கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு. மூட்டுப் பிரச்னைகளை அலட்சியப்படுத்தினால், அது சுற்றியுள்ள பிற திசுக்களையும் சேதப்படுத்தும். பாதிப்பையும் தீவிரப்படுத்தும். டாக்டர் வீரபாகு முத்துசாமி: சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிபவர். 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை, விளையாட்டுக் காயங்கள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிக்கலான எலும்பியல் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் நிபுணர். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/health/shoulder-pain-and-the-arthroscopic-treatment-jr-ntr-underwent-whats-special-about-it




