இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. The Dark Heaven இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் 'போலி கப்புல்' சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பிரதீப் நடித்திருக்கிறார். இந்த நிகழ்வில் அவர் பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன. "இந்தப் படத்தில் பணியாற்றிய இணை நடிகர்கள், இயக்குநர், கேமராமேன், இசையமைப்பாளர், எடிட்டர் என அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இவங்க எல்லோரோடும் சேர்ந்து வேலை பார்த்தது ரொம்ப சந்தோஷம். படக்குழுவினர் எல்லாருமே ரொம்பவே நட்பாகப் பழகினாங்க. முக்கியமா, ஊடகங்களும் ரசிகர்களுமான நீங்கதான் இந்தப் படத்தை மக்கள்கிட்ட நல்ல விதமா கொண்டு போய் சேர்த்திருக்கீங்க. அதுக்கு நாங்க ரொம்பக் கடமைப்பட்டிருக்கோம். இந்த வாரமும் அதே ஆதரவைக் கொடுத்தீங்கன்னா, அடுத்த வாரமும் படம் இன்னும் பெரிய அளவிலான ரீச்சுக்குப் போகும்னு நம்புறோம். Poli Couple - Pradeep எல்லோருமே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் இந்தப் படத்தை உருவாக்கினோம். அதுக்கு ஏற்ற மாதிரிதான் நல்ல ரிசல்ட்டும் கிடைச்சிருக்கு. நான் ஒரு யூடியூபர். நான் முதல்ல படம் பண்ணப் போறேன்னு என்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டப்போ, 'என்னடா யூடியூப் பண்றவங்க எல்லாம் நடிக்க வந்துடுறீங்க, உங்களுக்கு என்னடா தெரியும்?'னு சொல்லி நிறைய பேர் கமெண்ட் பண்ணாங்க. அப்படி கேலி செஞ்சவங்களுக்கு எல்லாம் ஒரு சைகையில் பதில் சொல்லலாம்னு இருக்கேன்." என அந்த சைகையைக் காண்பித்து பேசி முடித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/the-dark-heaven-success-meet-influencer-pradeep-speech




