கரூர், பாக்கு காய் சீசன் துவங்கியதால், பெரிய பாக்கு மட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தட்டு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பாக்கு மரத்தில் இருந்து காய்ந்து விழும் மட்டைகளை பயன்படுத்தி தட்டுகள் தயாரிக்கும் தொழில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பாக்கு மட்டைகளை கொண்டு 8, 10 மற்றும் 12 இன்ச் அளவுகளில் தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக பல்வேறு வடிவங்களில் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மூலப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாக்கு மட்டை தட்டு உற்பத்தியாளர் கூறியதாவது:- சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்தும், கர்நாடகா மாநிலம் தும்கூரில் இருந்தும், பாக்கு மட்டை கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக வைகாசி, ஆனி, ஆடி, மாதங்களில் பாக்கு காய் உற்பத்தி துவங்கும். இதனால் பெரிய அளவிலான மட்டை விற்பனைக்கு கிடைக்காது. சிறிய மட்டைதான் விற்பனைக்கு வரும். கடந்த மாதம் எட்டு ரூபாய்க்கு விற்ற மட்டை தற்போது, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் எட்டு இன்ச் தட்டு, மூன்று ரூபாயில் இருந்து நான்கு ரூபாய்க்கும், 10 இன்ச் தட்டு, ஐந்து ரூபாயில் இருந்து ஆறு ரூபாய்க்கும், 12 இன்ச் தட்டு, ஐந்து ரூபாயில் இருந்து, 6.50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவ்வாறு கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/shortage-of-areca-plates-large-plate-makers-worried




