பெரியபாளையம், திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிராம தேவதையான ஸ்ரீ எலமாத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் 11-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி வைபவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலகுப் பானை நிறுத்துதல், ஹோமகுண்ட மேடையில் அக்கினி மூட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காப்பு கட்டி விரதம் இருந்த 258 பக்தர்கள் மாலையில் ஊர் எல்லையில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் புனித நீராடினர். தீமிதித்த பக்தர்கள் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட எலமாத்தம்மன், மங்கள வாத்தியம் முழங்க, வாணவேடிக்கையுடன் ஊர் எல்லைக்குச் சென்று, புனித நீராடிய பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலம் கோவிலை அடைந்ததும், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக 258 பக்தர்களும் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்வைக் காண்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தீமிதி நிகழ்வைத் தொடர்ந்து உற்சவர் எலமாத்தம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/thiruvallur-fire-walking-festival-at-soolaimeni-elamathamman-temple




