சென்னை, தமிழகத்தில், 2025 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில், 3,170 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 2024ல் யானைகள் எண்ணிக்கை, 3,063 ஆக இருந்தது. மொத்த எண்ணிக்கை யில், 70 சதவீத யானைகள், நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகளில் வாழ்கின்றன. யானைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதன் வாழிட பரப்பளவும் அதிகரிக்க வேண்டிய தேவை எழுகிறது. இந்நிலையில், யானைகள் திட்டத்துக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி வழங்குவதால், அதன் இறப்பு தொடர்பான விஷயங்களை, அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் எந்த பகுதியில், காட்டு யானைகள் இறந்தாலும், அது குறித்த பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை அறிக்கையை, மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். யானைகள் இறப்பை துல்லியமாக கண்காணிக்க, இதுதொடர்பான விபரங்களை, தமிழக வனத்துறை தணிக்கை செய்து வருகிறது. இருப்பினும், யானைகள் இறப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது; தமிழகத்தில், காட்டு யானைகள் இறப்புக்கு காரணமான விஷயங்களை தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், நடப்பு ஆண் டில், ஜனவரி முதல் ஜூன் இறுதி வரையிலான ஆறு மாதங்களில், 19 யானைகள் இறந்துள்ளன.இதில், 18 யானைகள் இயற்கையான முறையிலும், ஒரு யானை விபத்து காரணமாகவும் இறந்தது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் முதுமலை, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், தலா, எட்டு யானைகள் இறந்துள்ளன. இந்த யானைகள் இறப்பு குறித்த, பிரேத பரிசோதனை அறிக்கை, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2025ல், 127 யானைகள் இறந்தன என்ற தகவலுடன் ஒப்பிட்டால், தற்போது யானைகள் இறப்பு குறைந்துள்ளது. இதையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/shocking-news-19-elephants-have-died-in-tamil-nadu-in-six-months




