சென்னை, சென்னை மெட்ரோ திட்டம் கட்டம் 2 வழித்தடத்தில் உள்ள 11-வது சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றது. இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்காக மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், 'நீலகிரி' என்று பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை ரெயில் நிலையத்திலிருந்து மூலக்கடை ரெயில் நிலையம் வரையிலான (up line) பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியது. மொத்தம் 819 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. இது TU01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட 11-வது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு ஆகும். ”நீலகிரி” ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் இதுவரை 24 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை முடித்து இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது. இந்தத் திட்டத்தின் TU-01 ஒப்பந்தப் பிரிவின் கீழ் வரும் மாதவரம் நெடுஞ்சாலை முதல் மூலக்கடை வரையிலான சுரங்கப் பாதை பகுதி பல பெரிய சவால்கள் நிறைந்ததாக அமைந்தது; குறிப்பாக, 'நீலகிரி' (S 96) என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பக்கிங்ஹாம் கால்வாயின் அடியிலும், வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையின் அடியிலும் வெற்றிகரமாகப் பாதையை அமைத்ததோடு, அப்பகுதியில் இருந்த 14-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் பொதுமக்களின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாதவாறு தடையின்றி மாற்று நீர் ஆதாரங்களை அமைத்துக் கொடுத்து இப்பணிகள் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளன. சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவதும், அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச நில அதிர்வு மற்றும் மாற்றங்களுக்குள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. மேலும், இப்பணி நடைபெற்ற காலம் முழுவதும் விரிவான கண்காணிப்புக் கருவிகள் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதிசெய்யப்பட்டது. பங்கேற்பு இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் கொள்ளி வெங்கட ரமணா (சுரங்கப் பாதை), பொது ஆலோசகர் குழுவின் முதன்மை வரைபடப் பொறியாளர் நாயுடு, டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் விஜய குமார், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-project-2-11th-tunnel-excavation-completed




