Believe you can and you're halfway there. – Theodore Roosevelt (உங்களால் முடியும் என்று நம்புங்கள்; நீங்கள் வெற்றியின் பாதி வழியைக் கடந்துவிட்டீர்கள்!) Quote of the day: நம்பிக்கையே முதல் வெற்றி; ஒவ்வொரு நாளையும் ஒரு நல்ல சிந்தனையோடு தொடங்குவது, அந்த நாள் முழுமைக்குமான ஒரு நேர்மறை ஆற்றலை நமக்குக் கொடுக்கும். அந்த வகையில், இன்று நாம் பார்க்கவிருக்கும் பொன்மொழி, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் கூறியது. ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பே பலருக்கும் வரும் மிகப்பெரிய சந்தேகம், "இது நம்மால் முடியுமா?" என்பதுதான். இந்த ஒரு சிறு சந்தேகம், பல பெரிய வெற்றிகளை முளையிலேயே கிள்ளிவிடுகிறது. இதற்கான அருமருந்துதான் ரூஸ்வெல்ட் கூறிய இந்த வரிகள். சிறுவயதில் முதன்முதலாக சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட நாட்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அந்தச் சைக்கிள் ஒரு பெரிய மலை போலத் தெரியும். "எப்படி இரண்டு சக்கரத்தில் பேலன்ஸ் செய்வது? கண்டிப்பாகக் கீழே விழுந்துவிடுவோம்" என்ற பயமும் இருக்கும். அப்பாவோ, அண்ணணோ, நண்பனோ யாரோ ஒருவர் பின்னால் சீட்டைப் பிடித்துக் கொண்டு நம்முடனே ஓடி வருவார்கள். "நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன், நீ பயப்படாமல் மிதி" என்பார்கள். அவர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தைரியத்தில், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையில் நாம் வேகமாக பெடல் செய்வோம். சைக்கிள் நேராகச் செல்லும். Quote of the day: நம்பிக்கையே முதல் வெற்றி; திடீரென திரும்பிப் பார்த்தால், அவர்கள் எப்போதோ சைக்கிளை விட்டுவிட்டுப் பின்னால் நின்றுகொண்டிருப்பார்கள்! நாம் தனியாகத்தான் ஓட்டி வந்திருப்போம். அவர்கள் சீட்டை விட்டுவிட்டார்கள் எனத் தெரிந்த மறுகணம் நாம் கீழே விழுந்திருப்போம். ஆனால், அவர்கள் பிடித்துள்ளார்கள், "நம்மால் பேலன்ஸ் செய்ய முடியும்" என்று மனம் எப்போது முழுமையாக நம்பியதோ, அப்போதே நீங்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். இந்த நிகழ்வுதான் ரூஸ்வெல்ட் சொல்லும் தத்துவம். ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன், உங்களால் முடியும் என்று மனதை நீங்கள் முழுமையாக நம்ப வைக்கும்போதே, அந்தச் செயலின் பாதி கடினத்தன்மையை நீங்கள் கடந்துவிட்டீர்கள். மீதிப் பாதி உங்கள் உழைப்பிலும் பயிற்சியிலும்தான் இருக்கிறது. உங்கள் மீதான உங்கள் நம்பிக்கைதான், உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் எரிபொருள். இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்! Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/lifestyle/motivation/quote-of-the-day-self-confidence-motivation




