சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், குரூப்-1, முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை tnpscexams.in என்ற இணையத்தில் விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 05/2026, நாள் 23.06.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி- பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை (கொள்குறி வகை) (ஒளிக்குறி உணரி) தேர்வு 27.09.2026 முற்பகல் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளம் மற்றும் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-group-1-main-exam-hall-ticket-release




