இயற்கையின் அற்புதம் பார்ப்பவர் நெஞ்சங்களை அள்ளும் பேரழகோடு, வான் மேகம் கருக்கும் போது தோகை விரித்து ஆடும் மயில், இந்தியாவின் தேசியப் பறவை என்ற பெருமைக்குரியது. வண்ணமயமான இறகுகளும், கம்பீரமான நடையும் கொண்டது மயில். ஆண் மயிலின் காதல் நடனம் மயில்களில் ஆண் பறவை மட்டுமே நீண்ட, கண் கவரும் தோகையை கொண்டிருக்கும். பெண் மயில்களுக்கு இந்த நீண்ட தோகை இருக்காது. மழைக்காலம் தொடங்கும் போது, பெண் மயிலை கவர்வதற்காக ஆண் மயில் தனது பிரம்மாண்டமான தோகையை விசிறி போல விரித்து, சிலிர்த்து ஆடும் நடனம் உலகப் புகழ்பெற்றது. இறகுகளின் ரகசியம் ஒரு ஆண் மயிலின் தோகையில் சுமார் 150 முதல் 200 இறகுகள் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் இனப்பெருக்க காலம் முடிந்தவுடன் இந்த இறகுகள் உதிர்ந்து, மீண்டும் புதிதாக முளைக்கும். மயில்களின் கூட்டத்திற்கு என்ன பெயர்? தமிழில் இதனை நாம் மயில் கூட்டம் அல்லது மயில் மந்தை என்று பொதுப்படையாகக் குறிப்பிட்டாலும், அவற்றின் செயல்பாட்டை வைத்து பின்வருமாறு பிரிக்கலாம்: மயில்களின் கம்பீரமான தோற்றத்தால், அவற்றின் கூட்டத்தை 'பெருமிதம்' அல்லது 'கம்பீரம்' என்ற பொருள்படும் "ப்ரைடு" என்று அழைப்பது மிகவும் பிரபலம். மயில்கள் உணவு தேடுவதற்காக ஒன்றுகூடும் போது அதனை "மஸ்டரிங்" என்பார்கள். குழுவின் கட்டமைப்பு தலைமை பொதுவாக மயில்களின் கூட்டத்திற்கு ஒரு முதிர்ந்த ஆண் மயில் தலைமை தாங்கும்.ஹாரெம் அமைப்பு: ஒரு கூட்டத்தில் ஒரு ஆண் மயிலுடன், பல பெண் மயில்களும் மற்றும் அவற்றின் குட்டிகளும் வாழும். ஒரு ஆண் மயில் பொதுவாக 2 முதல் 5 பெண் மயில்கள் கொண்ட குழுவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இனப்பெருக்க காலம் இனப்பெருக்க காலம் அல்லாத பிற நாட்களில், ஆண் மயில்கள் சில சமயங்களில் தனியாகவோ அல்லது பிற ஆண் மயில்களுடன் சேர்ந்தோ சிறிய 'முரட்டு சிங்கிள்ஸ்' கூட்டமாக வாழும். மயில்களின் கூட்டு வாழ்க்கை முறைகள் இரவில் மரங்களில் தங்குதல் பகல் முழுவதும் நிலத்தில் உணவு தேடும் மயில்கள், மாலை மறைந்தவுடன் கூட்டமாக உயரமான மரங்களின் கிளைகளுக்கு சென்று அடைக்கலம் புகுந்துவிடும். இது காடுகளில் வாழும் சிறுத்தைகள், நரிகள் போன்ற விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள உதவும் ஒரு கூட்டு யுக்தியாகும். அபாய எச்சரிக்கை கூட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு மயில் ஆபத்தை உணர்ந்தால், அது ஒருவித உரத்த, விசித்திரமான ஒலியை எழுப்பும். இந்த ஒலியை கேட்டவுடன் கூட்டத்தில் உள்ள மற்ற மயில்கள் மட்டுமின்றி, காட்டில் உள்ள பிற விலங்குகளும் உஷாராகிவிடும். குட்டிகளின் பராமரிப்பு பெண் மயில்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்த பிறகு, குட்டிகளை பாதுகாக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க பெண் மயில்களையே சாரும். குட்டிகள் ஓரளவிற்குப் பறக்கும் வரை தாய் மயில் அவற்றை மற்ற விலங்குகளின் கண்ணில் படாமல் புதர்களுக்குள் வைத்தே பராமரிக்கும். விவசாயிகளின் உற்ற நண்பன் மயில்கள் காடுகளிலும், விவசாய நிலங்களின் அருகிலும் அதிகம் வாழ்கின்றன. இவை தானியங்கள், பழங்கள் மற்றும் பூச்சிகளை உணவாகக் உட்கொள்கின்றன. குறிப்பாக, வயல்வெளிகளில் பயிர்களை நாசம் செய்யும் விஷப் பாம்புகள் மற்றும் பூச்சிகளை வேட்டையாடி உண்பதால், மயில்கள் எப்போதுமே விவசாயிகளின் உற்ற நண்பனாக கருதப்படுகின்றன. 1963-ல் கிடைத்த தேசிய பறவை அந்தஸ்து மயிலின் கம்பீரம், அழகு மற்றும் இந்திய கலாச்சாரத்தோடு அதற்குள்ள நெருங்கிய பிணைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடந்த 1963-ஆம் ஆண்டு இந்திய அரசு மயிலை தேசிய பறவையாக அறிவித்தது. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மயில்களை வேட்டையாடுவதோ அல்லது துன்புறுத்துவதோ கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டு, சிறைத்தண்டனை வரை வழங்கப்படுகிறது. அதிசய வெள்ளை மயில்கள் நம்ம ஊர்களில் நீல நிற மயில்களை பார்த்திருப்போம். ஆனால், மரபணு மாற்ற குறைபாட்டால் தோன்றும் முற்றிலும் வெள்ளை நிற மயில்களும் உலகில் உள்ளன. இவை பார்ப்பதற்குப் பனிப்பொழிவில் உறைந்த தேவதையை போல அதீத அழகுடன் காட்சியளிக்கும்.இலட்சக்கணக்கான பறவைகளுக்கு மத்தியில், தனது பேரழகால் நம் நாட்டின் அடையாளமாக திகழும் மயில்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். வெள்ளை மயில் ஆயுட்காலம் காடுகளில் வாழும் மயில்களின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 20 ஆண்டுகள் ஆகும். அதே சமயம், மனிதர்களின் பராமரிப்பில் உயிரியல் பூங்காக்களிலோ அல்லது பாதுகாக்கப்பட்ட இடங்களிலோ வாழும் மயில்கள் 30 முதல் 40 ஆண்டுகள் வரை கூட உயிர்வாழ வாய்ப்புள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/indias-national-bird-peacock-info




