கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது, "மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோரின் பெயரை சொல்லவே எனக்கு வாய் வரவில்லை. இரண்டு பேரும் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள். தாராபுரத்தில் சத்யபாமா விசிலை விட 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். எதற்காக இவர் ராஜினாமா செய்தார் என மக்கள் கேட்டும் சொல்லவில்லை. பொள்ளாச்சி ஜெயராமன் நமது ஆட்சி வந்திருந்தால் நம்ம கட்சியில் இருந்திருப்பாராம். நாம் ஆட்சிக்கு வராததால் ஆளுங்கட்சிக்கு செல்ல வேண்டும் என ராஜினாமா செய்து போயியுள்ளார். 35 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு கட்சி மாறியுள்ளார். மக்கள் ஓட்டை பெற்று இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று கட்சி மாறிய அத்தனை பேரும் நபர் ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கட்சி மாறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றுவதற்காக நபர் ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வாக்கை வாங்கி ஏமாற்றிய அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பதற்காகதான் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வந்துள்ளது. இத்தேர்தலில் அ.தி.மு.க அறுதி பெரும்பான்மை உடன் வெற்றி பெறும். தேர்தல் முடிந்த மூன்றே நாள்களில் இந்த ஆட்சி வீட்டுக்கு போகும். மீண்டும் பொதுத்தேர்தல் வரும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்" எனத் தெரிவித்தார். ’அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் இடி விழுந்தது போல உள்ளது’ – கோவை தொழில் துறையினர் வேதனை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/pollachi-jayaraman-alleges-35-crore-was-paid-to-admk-mlas-who-switched-parties




