சென்னை, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் மாற்றுக்கட்சியி னர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வுக்கு அமைச்சரும், த.வெ.க. பொதுச்செயலாளருமான என்.ஆனந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் வெங்கடரமணன், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ் கர், முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் பங் கேற்றனர்.முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், திருச்சி மேற்கு டாக்டர் மாலா, முன்னாள் எம்.பி. உதயக்குமார் (திண்டுக்கல்), காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹசீனா சையத் உள்பட மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் த.வெ.க.வில் இணைந்தனர். 4 நாட்கள் தான் பிரசாரம் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்த் பேசியதாவது:-234 தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கிய கட்சி த.வெ.க. தான். தியாகராய நகர் தொகுதியில் 4 நாட்கள்தான் நான் பிரசாரத்திற்குச் சென்றேன்.மற்ற நாட்களில் விஜய்யுடன் தான் இருந்தேன். விஜய் முகத்திற்காகத் தான் மக்கள் வாக்களித்தனர். நான் அமைச்சராக இருக்கிறேன் என்றால் அதற்கு விஜய்தான் காரணம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஊழல் செய்தோ, மற்றவர்களின் பணத்தை எடுத்தோ எக்காரணத்தைக் கொண்டும் கட்சியை நடத்த மாட்டோம், ஆட்சியை நடத்த மாட்டோம். அப்படி நாங்கள் ஏதாவது தவறு செய்தால் உடனடியாக எங்களைப் பதவியில் இருந்து நீக்கம் செய்து விஜய் நடவடிக்கை எடுப்பார். இது எங்களுக்கு தெரியும். எனவேதான் இங்கே அனைவரும் ஒழுக்கத்துடன் இருந்து கொண்டு இருக்கிறார்கள். விரைவில் பதவி மாற்று கட்சியில் இருந்து இணைந்தவர்களுக்கு விரைவில் பதவி வழங்கப்படும். இதுகுறித்து முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பார். கட்சியில் இணைந்தவர்கள், த.வெ.க. வினருடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-run-the-party-or-the-government-through-corruption-minister-anand-speaks




