நம்பமுடியாத அளவுக்கு வான்வெளியில் விசித்திரங்கள் நிறைந்த இடமாக சூரிய குடும்பம் விளங்குகிறது. சூரியனையும், அதனை சுற்றி வரும் கோள்களையும் சூரிய குடும்பம் என்று அழைக்கிறோம். சூரிய குடும்பத்தில் எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உள்பட சிறிய கோள்களும் உள்ளன. இந்த கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாக கொண்டு வெவ்வேறு நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அவை பற்றிய சில தகவல்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தக்கூடியவை. அவை என்னவென்று பார்ப்போமா? புதன் கோளின் ஆரம் பூமியின் மையப்பகுதி அதன் ஆரத்தில் சுமார் 50 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் புதன் கோளின் ஆரத்தில் சுமார் 85 சதவீதம் அதன் உலோக மையப்பகுதியால் ஆனது என்பதை நாசாவின் 'மெசஞ்சர்' விண்கலத்திட்ட ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. கோள்கள் உருவானபோது ஏற்பட்ட மோதலில் புதன் கோளின் வெளிப்புற பாறை அடுக்கு கள் அழிந்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. மொத்த எடையில் 99.86 சதவீதம் பூமியில் இருந்துகொண்டு பிரபஞ்சத்தின் அளவை முழுமையாக புரிந்துகொள்வது சாத்தியமற்றது. நாசாவின் தரவுகளின்படி, சூரிய குடும்பத்தின் மொத்த எடையில் 99.86 சதவீதம் சூரியனின் வசமே உள்ளது. அதாவது சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்கள், நிலவுகள், சிறுகோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் மொத்த எடை 0.24 சதவீதத் துக்கும் குறைவான அளவையே கொண்டிருக்கும். முழு சூரிய குடும்பத்தையும் சாதாரண வீட்டு வாசற்கதவின் அளவிற்கு சுருக்கினால், பூமியானது சிறிய நாணயத்தின் அளவே இருக்கும். நீரில் மிதக்கும் கோள் 'சனி' சனி ராட்சத வாயு கோளாக கருதப்படுகிறது. இதன் அடர்த்தி மிகவும் குறைவு என்பதால், நீரில் மிதக்கும் தன்மை கொண்டது. பொதுவாக சனி கிரகம் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆனது. நாசாவின் கருத்துப்படி சூரிய குடும்பத்தில் நீரை விடக்குறைவான அடர்த்தி கொண்ட ஒரே கோள் இதுவாகும். வெப்பமான கோள் 'வெள்ளி' சூரியனுக்கு அருகில் இருந்தபோதிலும். புதன் கோளை விட வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக இருக்கும். கார்பன் டை ஆக்சைடு நிறைந்த அதன் வளிமண்டலம் வெப்பத்தை மிகத்திறமையாக தக்கவைத்துக்கொள்வதால், வெள்ளியின் மேற்பரப்பு வெப்ப நிலை தொடர்ந்து 470 டிகிரி செல்சியஸாக (878 டிகிரி பாரன்ஹீட்) இருக்கும். இந்த வெப்பநி லையில் ஈயம் கூட உருகிவிடும். கோள்களுக்கு இடையிலான இடைவெளி விண்வெளி பெரும்பாலும் வெறுமையானது. சூரியனை சுற்றி வரும் கோள்கள் அருகில் இருப்பது போல் தோன்றினாலும் ஒவ்வொன்றும் நெடுந்தொலைவில்தான் அமைந்திருக்கின்றன. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரி சையாக வைத்தால் கூட, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா? சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர். விண்வெளியின் பரந்து விரிந்த வெற்றிடத்துடன் ஒப்பிடும்போது, கோள்கள் ஒன்றுக்கொன்று எவ்வளவு தொலைவில் அமைந் துள்ளன என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். வியாழன் கோளில் மிக கடுமையான புயல்கள் வீசுகின்றன. அங்கு வீசும் புயல்கள் பூமியில் வீசும் சூறாவளிகளை விட பல மடங்கு பெரியவை. சக்திவாய்ந்தவை. அதிலும் 'கிரேட் ரெட் ஸ்பாட்' எனப்படும் மகா சிவப்பு புள்ளி சுமார் 350 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வீசி வருகிறது. இந்த மகா சிவப்பு புள்ளியின் மொத்த அளவு 40 ஆயிரம் கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மூன்று பூமிகள் உள்ளே அடங்கும் அளவுக்கு பெரி யது. தற்போது இந்தப் புயல் சுருங்கி 16 ஆயிரத்து 500 கிலோமீட்டர் விட்டமாக மாறியுள்ளது டன், ஒவ்வொரு ஆண்டும் அதன் அளவு குறைந்து கொண்டே வருகிறது. செவ்வாய் கிரகத்தில் எரிமலை சூரிய குடும்பத்திலேயே செவ்வாய் கிரகம் ஈர்க்கக்கூடிய புவியியல் அமைப்புகளை கொண் டுள்ளது. நாசாவின் செவ்வாய் ஆய்வுத் திட்டத்தின் தகவல் படி, செவ்வாய் கிரகத்தில் அமைந்துள்ள 'ஒலிம்பஸ் மான்ஸ்' எரிமலை 21.9 கிலோமீட்டர் (13.6 மைல்) உயரம் கொண்டது. இது உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயரமானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/amazing-facts-about-the-solar-system




