சென்னை, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மாற்று கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களை முதல்-அமைச்சர் விஜய் நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், முதல்-அமைச்சரான பிறகு விஜய் இரண்டாவது முறையாக கட்சியின் தலைமை அலுவலகமான பனையூருக்கு இன்று வருகை தந்தார். மேலும் புதிதாக கட்சியில் இணைத்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. தமிழக வெற்றிக் கழகம் இதனிடையே முன்னாள் அதிமுக அமைச்சர் வைகைச்செல்வன் மற்றும் அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும் அண்மையில் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இருந்த பெங்களூரு புகழேந்தி ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த புகழேந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “தவெக அலுவலகத்திற்குச் சென்றதும், அதிமுக அலுவலகத்திற்கே வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கு 95 சதவீதம் அதிமுகவினர்தான் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரை அங்கு பார்க்க முடிந்தது. எடப்பாடி பழனிசாமி ஏதேனும் ஒரு கட்சி வலிமையாக இருந்தால் அதை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தால்போதும். ரஷிய அதிபராக புதின் தொடர்ச்சியாக இருக்கிறார். அந்த கட்சியை நிரந்தரமாக ஒழிக்க வேண்டுமென்றால் அதை பழனிசாமியிடம் கொடுத்தால்போதும்” என்று அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/if-you-want-to-permanently-destroy-a-party-hand-it-over-to-edappadi-palaniswami-pugazhendhi




