டோக்கியோ, 45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகா ணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது.2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெறும் கிரிக்கெட்டில் வெண்கலப் பத்தகத்துக்கான போட்டியில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் தரிந்து ரத்நாயகே நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதம் அடித்தார்.கேப்டன் சஹான் அரச்சிகே 33 ரன்கள் எடுத்தார். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-sri-lanka-sets-a-target-of-166-runs-for-the-bangladesh-team




